சீனா மூடி மறைத்த ரகசியம்; டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்

வாஷிங்டன்: 'சீன அரசு, கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தது. அதனால் தான், அமெரிக்கா உட்பட உலக நாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், சீனா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, சீனா ரகசியம் காத்துள்ளது. அதன் தீவிரம் குறித்து தெரியப்படுத்தாமல் இருந்தது. அதனால், மிகக் கொடூரமான நரக வேதனையை அந்த நாடு சந்தித்தது. அது, தற்போது உலகெங்கும் ஆட்டிபடைத்து வருகிறது. துவக்கத்திலேயே, சரியான தகவலை, சீனா தெரிவித்திருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், எச்சரிக்கையுடன், தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.